- °C
Are You a business owner?
List Your Business / ADசென்னை: காரைக்குடி - மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மைசூர் - காரைக்குடிக்கு இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில் இயக்க அட்டவணையை வெளியிட்டுள்ளது தென் மேற்கு ரயில்வே.
அதேபோல, நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கும், திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டிற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதி ஆகிய நாட்களில் நாகர்கோவில் - தாம்பரம் ரயில் இயக்கப்படும் என்றும், மறு மார்க்கமாக தாம்பரம் - நாகர்கோவில் ரயில் 19 மற்றும் 26 ஆம் தேதிகளில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 11 ஆம் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை: நமது நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சேவையாக விளங்கி வருவது ரயில் சேவை தான். நாள்தோறும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில் போக்குவரத்தை தம் அன்றாட பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த கட்டணம், விரைவான பயணம் உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை விரும்புகின்றனர். பயணிகளின் வசதிக்காக அந்தந்த ரயில்வே கோட்டங்கள் சார்பில் பண்டிகை தினங்கள், வார விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களில் நகரங்களுக்கிடையையும் மாநிலங்களுக்கு இடையேயும் அண்டை மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: அந்த வகையில் சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூர் காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.